அந்த நடிகை உடம்பில் எத்தனை மச்சம் உள்ளது? நடிகரிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்....!

திரையுலகில் ஏதேனும் ஒரு புதிய படம் வெளியானால் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அப்படி நடக்கும்போது படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார்கள். இவை அனைத்துமே திரையுலகில் நடக்கும் ஒரு சாதாரண சம்பவங்கள் தான்.
இந்நிலையில் இதேபோன்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நிரூபர் ஒருவர் நடிகரிடம் மிகவும் தர்மசங்கடமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அந்த செய்தியாளர் வேறு யாருமல்ல பிரபல தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் சுரேஷ் கொண்டேத்தி தான். இவர் தெலுங்கில் சந்தோஷம் என்ற வார இதழை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற டிஜே டில்லு என்ற தெலுங்கு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சுரேஷ் பத்திரிகையாளராக பங்கேற்றிருந்தார். அப்போது அவர் படத்தின் ஹீரோ சித்து ஜொன்னாலகடாவிடம், படத்தை போலவே நிஜத்திலும் நடிகை நேஹா ஷெட்டியின் உடம்பில் மொத்தம் எத்தனை மச்சங்கள் உள்ளன என்பதை கண்டுபிடித்து விட்டீர்களா? என கேள்வி எழுப்பி ஹீரோவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார்.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அனைவரின் முன்னிலையிலும் ஒரு ஹீரோவை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டதால் இதை சற்றும் எதிர்பாராத நாயகன் சித்து தர்மசங்கடத்திற்கு ஆளானதோடு எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்து விட்டார். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுரேஷின் இந்த செயலுக்கு அந்த படத்தின் நாயகி நேஹா உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சுரேஷோ கூலாக, "நான் எவ்வித இரட்டை அர்த்தத்திலும் அவ்வாறு கேட்கவில்லை. இது ஒரு காதல் படம். நான் ரொமான்டிக் கேள்வி கேட்டேன். எனது நோக்கம் தூய்மையானது. தயவு செய்து என்னை தவறான முறையில் பேசாதீர்கள்" என நியாயப்படுத்தி வருகிறார்.