விஜய்க்கு எமனாக வந்த பிரபாஸ்…நீ தமிழ்ல மட்டுமே நடி தளபதி….கதறும் ரசிகர்கள்…

Published on: August 2, 2022
vijay
---Advertisement---

இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த நடிகர் விஜய் முதன் முறையாக நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வாரிசு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழிலும் உருவாகவுள்ளது. தெலுங்கில் டப் செய்யப்படவுள்ளது.

இப்படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப்போகவே இப்படத்தில் ஆர்வமுடன் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் பொங்கலுக்கு வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். ஆனால், இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கில் பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்து வரும் புதிய திரைப்படமான ‘ஆதிபுருஷ்’ ஆந்திராவில் பொங்கள் ரிலீஸை குறி வைத்துள்ளது.

adipurush

எனவே, அப்படம் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும். எனவே, அப்போது வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என கருதிய தயாரிப்பாளர், தமிழில் வெளியாகி 4 நாட்கள் கழித்தே தெலுங்கு வாரிசை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

இதையடுத்து ‘நீ தமிழில் மட்டுமே நடி தளபதி’ என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகின்றனர்.