இதுதான் என் கடைசி படம்... சினிமாவை விட்டு விலகுகிறேன்... பிரபல காமெடி நடிகர் திடீர் அறிவிப்பு....!
பிரபல காமெடி நடிகர் ஒருவர் இனி நான் படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் வேறு யாருமல்ல தெலுங்கில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் ராகுல் ராமகிருஷ்ணா தான்.
முன்னதாக பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய ராகுல், தியேட்டர் ஆர்டிஸ்ட்கள் குழுவுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் நடிப்பதுடன் சேர்த்து திரைக்கதை வசனமும் எழுதி வந்தார். அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் ராகுல் நடித்துள்ளார்.
சமீபத்தில் ராகுல் ராமகிருஷ்ணா ஹீரோவாக நடித்த ஜதி ரத்னலு படம் வெளியானது. யாருமே எதிர்பாராத வகையில் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து ராகுலின் மார்க்கெட் தெலுங்கு சினிமாவில் உயர்ந்தது.
இதன் காரணமாக முன்னணி இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ராகுலுக்கு கிடைத்தது. அதுவும் ஆர்ஆர்ஆர் படத்தில் மிகவும் வெயிட்டான ரோலில் ராகுல் நடித்துள்ளாராம். இந்த ஆண்டில் அதாவது 2022 ஆம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஆர்ஆர்ஆர் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராகுல் தனகு டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "2022 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் நான் நடிக்க போவதில்லை. ஆர்ஆர்ஆர் படம் தான் நான் கடைசியாக நடித்த படம். இதற்கு மேல் எந்த படமும் நடிக்க மாட்டேன். நான் இதற்காக கவலைப்படவில்லை. இதற்காக வேறு யாரும் கவலைப்பட வேண்டாம்" என கூறியுள்ளார்.
இவரின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. நன்றாக வளர்ந்து வரும் இளம் நடிகர் திடீரென இப்படி ஒரு முடிவெடுத்திருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.