Categories: latest news

தனுஷின் படங்களில் அதிக வசூலா?!… பாக்ஸ் ஆபிசில் கலக்கும் Tere Ishk Mein..

நடிகர் தனுஷ் தமிழ் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நேரடி ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்
. ஆனந்த் எல்.ராய் இயக்கிய அட்ராங்கி ரே படம் மூலம்தான் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின் அதே இயக்குனரின் படமான Raanjhanaa என்கிற படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களும் பாலிவுட்டில் ஓரளவுக்கு வசூலை பெற்றாலும் தமிழில் சுமாரான வசூலை பெற்றது. இந்நிலையில்தான் அதே ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவான Tere Ishk Mein திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியானது.

தமிழில் இப்படம் பெரிய வசூலை பெறவில்லை. அதற்கு காரணம் இந்த படத்திற்கு தமிழில் பெரிய புரமோஷன் செய்யப்படவில்லை. அதேநேரம் வட இந்திய மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றது. படம் வெளியாகி 8 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் இப்படம் 124.43 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இப்படம் 150 கோடி வசூலை தாண்டும் என்கிறார்கள்.

தனுஷின் திரை வாழ்வில் இதுவரை எந்த படமும் 150 கோடி வசூலை தொட்டதில்லை. எனவே Tere Ishk Mein திரைப்படம் தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக சாதனை படைக்கும் என தெரிகிறது.

Published by
சிவா