என்னை தூக்கிட்டாங்க. அதான் படம் ஓடல!.. டெஸ்ட் படத்தின் தோல்வியை கொண்டாடும் நடிகர்!..

test
Test: ஓடிடியில் நேரடியாக வெளியாகி இருக்கும் டெஸ்ட் படத்தின் தோல்விக்கான விமர்சனங்களை ஒரு பிரபல நடிகர் சந்தோஷமாக கொண்டாடி வருவது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இந்திய சினிமாவில் நேரடியாக தியேட்டர் ரிலீஸ் செய்வது தான் பல ஆண்டுகளாக இருந்தது. ஆனால் கொரோனா லாக் டவுன் காரணமாக படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த நேரத்தில் தான் ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்தது.
பெரிய நடிகர்களின் படங்கள் கூட நேரடியாக ஓடிடிக்கு வந்தது. இது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயமாக மாறியது. சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன், ஜெய் பீம், சார்பேட்டா பரம்பரை என வரிசையாக படங்கள் ரிலீஸ் செய்து பட்டையை கிளப்பியது.

தொடர்ந்து, லாக் டவுன் பிரச்னை சரியாக படங்கள் மீண்டும் தியேட்டருக்கு வந்தது. இருந்தும், அதற்கு முன்னர் படங்கள் கிடைத்த வசூலை ஓடிடிக்கு போய் விட்டு வந்ததால் தியேட்டர் ரிலீஸ் படங்கள் மிஸ் செய்தது. பல படங்கள் ரசிகர்களிடம் விமர்சனத்தை குவித்தது.
இப்படி இருக்க ஒவ்வொரு படத்தின் விற்பனையிலும் அடி வாங்கியது. ஓடிடியின் ஆதிக்கமும் எகிற தொடங்க அவர்கள் ஒரு படத்தினை எடுக்கவும் அதற்கான தொகையையும் முடிவு செய்தனர். இதில் பல பெரிய நடிகர்களின் பட விற்பனை கூட அடி வாங்கியது.
இது ஒரு புறமிருக்க சில பிரபலங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்கள் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கினர். அப்படி வரும் படங்கள் சில மட்டுமே வெற்றி பெற்றும். பல படங்கள் பெரிய அளவில் மொக்கை வாங்கி வரும் சம்பவம் தான் நடந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு கதை சரியில்லை. திரைக்கதையில் எதுவுமே இல்லை என விமர்சனம் எழுந்து வருகிறது. நடிப்பில் மாஸ் காட்டும் மாதவன், சித்தார்த், நயன் மாதிரி பிரபலங்களை வைத்துக்கொண்டு இப்படியா சொதப்புவீர்கள் எனக் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில், என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரை சித்தார்த் அப்பா கேரக்டருக்கு அழைத்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இவர் இவ்வளவு சந்தோசப்பட்டு பதிவிடுவதால் அவரை விலக்கி இருப்பார்கள் எனவும், நீங்க நடிக்காம போனதே நல்லது எனவும் கலாய்த்து வருகின்றனர்.