Test: மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாக்கி இருக்கும் டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் நாலாம் தேதியான இன்று நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் விமர்சனம் குறித்த தொகுப்புகள்.
சித்தார்த், மாதவன், நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டெஸ்ட். பிரபல கிரிக்கெட் வீரரான சித்தார்த் தன்னுடைய கேரியரில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க போராடுகிறார். மாதவன் தன்னுடைய கண்டுப்பிடிப்பான நீர் எரிப்பொருளை உருவாக்கி வருகிறார்.
பிள்ளைக்காக மருத்துவமனை ஏறி இறங்கும் குமுதா கேரக்டரில் நயன்தாரா உள்ளிட்டோரினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் டெஸ்ட். கிரிக்கெட் படம் என்பதால் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்தால் அதுதான் இல்லை.

படம் என்ன ஜானர் என்று எடுத்தவர்களுக்கே குழப்பம் இருக்கிறது. முக்கிய கதைக்கு வருவதற்கே ஒரு மணி நேரம் எடுக்கிறது. திரைக்கதையில் பல இடங்கள் நெருடல் உருவாகி விடுகிறது. இருந்தும் மாதவன் கேரக்டரை சரியாக செய்து இருக்கிறார்.
ஆனால் சித்தார்த் நடிப்பில் போராடினாலும் கேரக்டர் ஸ்கெட்ச்சால் பல இடங்களில் சொதப்பல் ஆகிவிடுகிறது. இதில் நயன்தாரா தான் அல்டிமேட். அவருக்கு கை வந்த எமோஷனல் கேரக்டர் என்பதால் எங்கும் பிசிறே இல்லாமல் தன்னுடைய கேரக்டரை செவ்வனே செய்துவிடுகிறார்.

நடிகர்கள் நடிப்பை கொட்டினாலும் எடிட்டிங் ஒரு பக்கம் காலைவாரி இருக்கிறது. பல இடங்களில் அப்பட்டமாக எடிட்டிங் குளறுபடிகள் வேறு பல்லை காட்டுகிறது. மாதவன் மற்றும் நயன் நடிப்புக்கு வேண்டும் என்றால் ஒருமுறை அந்த பக்கம் போய்விட்டு வரலாம் என்பதே உண்மை.