விஜயை பார்க்கவே புஸ்ஸி ஆனந்த் விட மாட்டேங்குறார்!.. புலம்பும் தாடி பாலாஜி!…

by சிவா |   ( Updated:2025-03-28 02:09:04  )
vijay
X

#image_title

Tamilaga vetrik kalagam: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தினார். அந்த மேடையில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அதேநேரம் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பற்றி அவர் பேசவே இல்லை. இதுபற்றிய விமர்சனங்களுக்கும் அவர் பதில் சொல்லவில்லை.

அதன்பின் கட்சியின் முதல் ஆண்டு விழாவிலும் சில பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டார். இன்று சென்னை திருவான்மியூரில் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 2500 பேர வரை கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த மேடையில் 17 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

விஜயின் வலது கை போல செயல்படுபவர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியை சேர்ந்த இவர் ரசிகர் மன்றங்களின் தலைவராக இருந்து இப்போது விஜய்க்கு ஆல் ரவுண்டராக மாறியிருக்கிறார். மாநாடு, பொதுக்கூட்டம் என என்ன நடந்தாலும் நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வது என எல்லாம் செய்வது இவர்தான்.

#image_title

இந்நிலையில்தான் நடிகர் தாடி பாலாஜி புஸ்ஸி ஆனந்தை விமர்சித்து பேசியிருக்கிறார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவக்கத்தில் இருந்தே விஜய் சாருடன் பயணிக்கிறார். அதேநேரத்தில் தன்னை தாண்டி யாரும் விஜயை பார்த்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். புதுச்சேரி செக் போஸ்ட் போல புஸ்ஸி ஆனந்த் நின்று கொண்டிருந்தால் என்ன பண்ன முடியும்?. தொண்டனின் குறையை தலைவனிடம் சொன்னால்தான் அவருக்கு தெரியும். அதுவரை தொண்டன் வருத்தத்தில்தான் இருப்பான்’ என புலம்பியிருக்கிறர்.

தாடி பாலாஜி பல படங்களில் விஜயுடன் நடித்திருக்கிறார். விஜய் கட்சி துவங்கியதும் அதில் தன்னை இணைத்துகொண்டார். தனது நெஞ்சில் விஜயின் உருவத்தை பச்சை குத்தி பர்மான்ஸ் செய்தார். ஆனால், பாலாஜிக்கு விஜய் எந்த பதவியும் கொடுக்கவில்லை. இதனால் அவர் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story