latest news

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாள் வசூல் நிலவரம்

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் இல்லையென்றால் படம் ஓடாது என்ற பிம்பத்தை உடைத்து எறிந்திருக்கிறார் மூத்த நடிகை ராதிகா சரத்குமார். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘தாய்கிழவி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாகி, தற்போது வசூல் வேட்டையாடி வருகிறது.

வெறும் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் பயங்கர வரவேற்பைப் பெற்றது. 10 நாட்களிலேயே ரூ. 50 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், தற்போது 12-வது நாள் முடிவில் உலகளவில் ரூ. 56.5 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட படம் இந்த அளவுக்கு வசூலிப்பது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி விவசாயி பட இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சிவகுமார் முருகேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கிராமத்து மனிதர்களின் இயல்பான நகைச்சுவை, பேராசை என அனைத்து உணர்வுகலையும் சொன்ன விதம் ரசிகர்கலை வெகுவாக கவர்ந்தது. இவரது திறமையைப் பார்த்து வியந்த சிவகார்த்திகேயன் தனது அடுத்த இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பையும் இவருக்கே வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

6 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago