---Advertisement---

சரத்குமாருடன் மோதும் ராதிகா…தாய்கிழவிக்கு தில்லு அதிகம்தான்

Published on: February 17, 2026
---Advertisement---

சரத்குமார் நடிப்பில் வருகிற 27ம் தேதி வெளியாக உள்ள படம் ஆழி. மாதவ் ரமா தாசன் என்ற மலையாள இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பினை மேற்கொஇருக்கும் இப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த படம் வருகிற 27ம் தேதி வெளியாகிரது.

இதே 27ம் தேதி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி வெளியாகிறது. சமீபத்தில் வந்த இப்படத்தின் டீஸர் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயன் அடுத்து தாய்கிழவி இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதே இப்படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே தெரிகிறது.

ஒரே நாளில் கணவன் – மனைவி படங்களுக்கான போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.