இந்த மனுஷன் எங்கயா போறாரு?... அனாந்திர காட்டில் தல அஜித்...வைரல் புகைப்படம்...

நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணிப்பது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குவது போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவர். வலிமை படப்பிடிப்பு நடைபெற்ற போது ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் தனியாக வந்தவர் அஜித்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து முடிந்து படக்குழு சென்னை திரும்பிவிட்டது. ஆனால், அஜித் ரஷ்யாவில் பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம் செய்யும் குழுவை சந்தித்து அவர்களோடு இணைந்து பைக் டிரிப் செய்தார்.

Ajith - cinereporters
அதோடு, 7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை பைக் மூலமாகவே சுற்றி வந்த பெண்ணான மாரல் யசர்லோவை டெல்லியில் அஜித் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது. எனவே, அஜித்தும் இது போல ஒரு நாள் பைக் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் பைக்கில் இந்தியா பாகிஸ்தான் எல்லை சென்றார் அஜித், அங்கு ராணுவ வீரர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானது. அதேபோல், தாஜ்மஹாலுக்கும் அவர் சென்றார்.
இந்நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டில் பைக்கில் நிழலில் அவர் மணலில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.