Categories: latest news

தாறுமாறு ஹிட் அடித்த அஜித்தின் வீடியோ.. மாஸ் காட்டும் தல ரசிகர்கள்!!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து தற்போது அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடித்துவருகிறார். ஆனால், இவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை, இவரும் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் என கூறுகிறார்கள். இவர் ஏற்கனவே தமிழில் ரஜினி நடித்த காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் – யுவன் கூட்டணியில் இதுவரை வெளியான படங்களெல்லாம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் இந்தப்படத்தின்மீதும் இப்போதே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ajith

அஜித் – யுவன் கூட்டணியில் ஏற்கனவே பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் தீம் மியூசிக் பெரிய அளவில் ரீச் ஆனது. இதனால் இப்படத்திலும் தீம் மியூசிக் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள் ரசிகர்கள். இப்படத்தை முடித்துவிட்டு அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

‘வலிமை’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். கடந்த மாதம் இப்படத்தில் இடம்பெற்றுள்ள நாங்க வேறமாரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் யூடியூபிலும் சாதனை படைத்தது.

சாமிப்பதில் இப்படத்தின் கிளிம்ப்ஸி வீடியோ ஒன்று வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அந்த வீடியோ இப்போது வரை யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Published by
adminram