கீர்த்தியா.? ப்ரியங்காவா? இந்த வயதில் இது தேவை தானா?!

by Manikandan |
கீர்த்தியா.? ப்ரியங்காவா? இந்த வயதில் இது தேவை தானா?!
X

இயக்குனர் நெல்சன் தளபதி விஜயின் பிஸ்ட் திரைப்படத்தை முடித்துவிட்டு அந்த படம் ரிலீசுக்கு முன்பு ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

தலைவர் 169 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தற்போதுவரை, நெல்சன், அனிருத், ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் இவர்கள் நால்வர் மட்டுமே உறுதியாகி உள்ளனர்.

இதையும் படித்து பாருங்களேன் - அங்கேயும் வில்லனா முடியல.! தொண்டை வலிக்குது.! கதறும் தனுஷ்கோடி.!

அடுத்தகட்ட நகர்வாக இப்படத்தின் கதாநாயகி யார் என்று தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். தற்போது கிடைத்த தகவலின்படி கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் இப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகனா என்று வியப்படைந்தனர். ஆனால், உண்மையில் இப்படி நடந்தால் அது ரஜினிக்கு ஜோடியாக இருக்காது. வேறு ஏதும் முக்கிய கதாபாத்திரமாக, அண்ணாத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தது போன்று ஏதேனும் முக்கிய கதாபாத்திரத்தில் இளம் நடிகைகள் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story