
Cinema News
ரஜினி படத்துக்கு இவ்ளோதான் பட்ஜெட்!…சன் பிக்ச்சர்ஸ் கறார்!…என்னடா நெல்சனுக்கு வந்த சோதனை!….
தர்பார், அண்ணாத்த என எதிர்பார்த்து இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பெரிய வெற்றியை தரவில்லை. அதன் காரணமாக அடுத்த திரைப்படத்தை எப்படியும் வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம்.
கோலமாவு கோகிலா, டாக்டர், என இரண்டு வெற்றி படங்களை இயக்கி அடுத்ததாக விஜயை வைத்து படம் இயக்கி கொண்டிருந்த நெல்சனை அழைத்து தனது அடுத்த பட வாய்ப்பை கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஆனால், நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மாறாக விமர்சனங்களை அதிகமாக பெற்றது. இதன் காரணமாக சற்று உஷார் ஆகி உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது.
அதன்காரணமாக, தற்போது நெல்சன் எழுதிய திரைக்கதையை மேம்படுத்தும் பணியில் கே.எஸ்.ரவிக்குமார் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், முதன் முதலில் இந்த படத்திற்கும் 225 கோடி ரூபாய் பட்ஜெட் கூறியிருந்தாராம்.
இதையும் படியுங்களேன் – தயவு செஞ்சு கல்யாணதுக்கு வந்துராதீங்க…நயன்தாரா இப்படி செய்தது யாரிடம் தெரியுமா?….
ஆனால், தற்போது அவ்வளவு பெரிய பட்ஜெட் கொடுக்க முடியாது என்று சன் பிக்சர்ஸ் கறார் காட்டுகிறதாம். தங்களால் 150 கோடி மட்டுமே தரமுடியும். அதனை வைத்து படத்தை முடித்து விடுங்கள் என்று கூறி வருகின்றனராம். இதனால் நெல்சன் தரப்பு மிகவும் வருத்தத்தில் இருக்கிறதாம்.
அதனால் எப்படி திரைப்படத்தை முடிப்பது என்று தெரியாமல் தற்போது குழம்பிப்போய் இருக்கிறாராம் இயக்குனர் நெல்சன். அடுத்தடுத்த வரும் அப்டேட் மூலம் தான் நெல்சன் இந்த படத்தில் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவரும் என்கிறது சினிமா வட்டாரம்.