நெல்சனுக்கு NO.! நானே கதை எழுதுகிறேன்.! களத்தில் குதித்த சூப்பர் ஸ்டார்.!

by Manikandan |
நெல்சனுக்கு NO.! நானே கதை எழுதுகிறேன்.! களத்தில் குதித்த சூப்பர் ஸ்டார்.!
X

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஆடியன்ஸ் மனநிலையில் இருந்து தான் கதைகளை தேர்வு செய்வார். இந்த சீனுக்கு ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள், இந்த சீனுக்கு ரசிகர்கள் விசிலடிப்பர் என சிந்தித்து இயக்குனர்களிடம் கதை கேட்பாராம் ரஜினிகாந்த.

சில நேரம் இயக்குனர்கள் கூறிய கதை பிடிக்கவில்லை என்றால் தானே ஒரு வரி கதை கூறிவிடுவாராம். அதனை விரிவுபடுத்தி கொண்டு வாருங்கள் என இயக்குனர்களுக்கு கூறிவிடுவாராம்.

அப்படி உருவானது தான் அருணாச்சலம், படையப்பா, பாபா போன்ற படங்கள். அப்படி, ஒரு சம்பவம் தற்போதும் நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்களேன் - மேடையிலேயே அந்த இயக்குனரை கிழித்து தொங்கவிட்ட அமீர்.! சாதி படம் எடுத்து சாவடிக்கிறீங்க?!

ரஜினியின் 169வது திரைப்படத்தை இயக்க பலர் கதை கூறியிருந்தனர். கடைசியில் நெல்சன் ஓகே செய்துவிட்டாராம். இதில் சுவாரசியம் என்னவென்றால், நெல்சன் கூறிய எந்த கதையையும் ரஜினி ஓகே சொல்லவில்லை. மாறாக ரஜினி கூறிய ஒரு வரி கதையை நெல்சன் டெவலப் செய்து கொண்டு வந்து ஓகே வாங்கியுள்ளாராம்.

ரஜினியின் 169வது திரைப்படம் ரஜினியின் மூலக்கதை கொண்டு நெல்சன் விரிவுபடுத்தி அதனை படமாக்க உள்ளனராம்.

Next Story