அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?...என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?....

தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் தற்போது விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை இயக்கி ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனால் திரைப்பிரபலங்கள் உட்பட விஜய் ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் உள்ளனர்.
விஜய்க்கு இந்த படம் ஹிட் கொடுக்காததால் அடுத்து ரஜினி வைத்து நெல்சன் இயக்குவதாக இருந்த தலைவர் 169 படம் பற்றிய ஆலோசனைகளும் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் பீஸ்ட் படம் பார்த்து ரஜினியும் அப்செட்டில் இருந்தார் என சோஷியல் மீடியாவில் தகவல் கசிந்தன.
இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. ஆகையால் இந்நிறுவனமும் நெல்சனை வைத்து படம் பண்ணலாமா வேண்டாமா ? என யோசிக்க அந்த பிரச்சினையை ரஜினியிடமே கொண்டு போய்விட்டது. ரஜினியிடம் உங்க படத்தை நெல்சன் இயக்க வேண்டும் என்றால் ஓகே இல்லையெனில் வேறு யாராவது இரண்டு இயக்குனர்களை சொல்கிறோம் என்று அந்த நிறுவனமே இரண்டு பேரை பதிவு செய்தது.
ஒன்னு தேசிங்கு பெரியசாமி இன்னொருவன் இயக்குனர் அட்லீ. அட்லீ அவர்கள் ஹிந்தி பட சூட்டிங்கில் இருப்பதால் முடிந்ததும் பார்க்கலாம் என யோசிக்கின்றனர். தேசிங்கு பெரியசாமி ரஜினியுடன் நீண்ட நாள் பயணம் செய்தவர். ஆகையால் யார் என்று தலைவர் கையில் தான் தற்சமயம் உள்ளது.