ஜெயிலரால் வந்த பயம்!.. தலைவர் 171-க்கு ரஜினி போட்ட கண்டிஷன்... லோகேஷ்தான் பாவம்!..

by சிவா |
jailr
X

Actor Rajini: ஜெயிலர் படம் ரஜினியே எதிர்பார்த்திராத அளவுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றி மூலம் தானே நிரந்தர சூப்பர்ஸ்டார் என ரஜினி நிரூபித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்த திரைப்படம் ரூ.700 கோடி வசூலை தாண்டியதாக சொல்லப்படுகிறது.

சந்திரமுகி படத்திற்கு பின் ரஜினிக்கு இப்படி ஒரு வெற்றி கிடைக்கவில்லை. சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய படங்கள் மட்டுமே நல்ல வசூலை பெற்றது. ஆனால், லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. எனவே, சந்திரமுகி போல ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என ரஜினி நினைத்தார்.

இதையும், படிங்க: 200 கோடி போச்சி!.. லியோ படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!. ஜெயிலர தாண்டுறது கஷ்டம்தான்!..

ஆனால், அவர் நினைத்ததை விட ஜெயிலர் படம் பல நூறு கோடிகளை வசூலித்துவிட்டது. தற்போது இவரின் நடிப்பில் வெளியாகும் அடுத்த படங்களையும் அதே ரேஞ்சுக்கு எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பாரப்பை படம் பூர்த்தி செய்யவில்லை எனில் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக முடியும்.

ஜெயிலர் பட வெற்றி விழாவில் பேசிய ரஜினியும் இதைத்தான் சொன்னார். அடுத்த படமும் இதேபோல் அமைய வேண்டும் என்கிற பிரஸ்ஸர் ஏற்பட்டுள்ளது என சொன்னார். இந்த நிலையில்தான் அடுத்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதையும் படிங்க: ரஜினியுடன் இணையும் ஸ்டைலீஸ் இயக்குனர்?!.. அப்போ வேற லெவல் சம்பவம்தான் போலயே!…

இப்படத்தின் படப்பிடிப்பு 2 நாட்களுக்கு முன்பே துவங்கவிருந்தது. ஆனால், ஞானவேலை அழைத்த ரஜினி ‘இப்படத்தின் கதை உங்களுக்கு 100 சதவீதம் திருப்தி ஆகும் வரை படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம். எவ்வளவு நாளானாலும் சரி. நான் காத்திருக்கிறேன். அடுத்த படமும் எனக்கு சூப்பர் ஹிட் படமாக அமைய வேண்டும்’ என சொல்ல படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.

எனவே, தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு துவங்க இன்னும் ஒரு மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். 170 படம் தள்ளிப்போனால் அவரின் படமும் தள்ளிப்போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பசியில மயக்கமே வந்துடுச்சி!.. இவ்வளவு அசிங்கப்படணுமா?… கவுண்டமணியிடம் புலம்பிய ரஜினிகாந்த்..

Next Story