தலைவர் ரஜினி இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டார்… இனி டான் ஆட்டம் தான்.! விரைவில் 170…

Published on: August 26, 2022
---Advertisement---

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை திருதிப்படுத்தவில்லை. அதனால் அடுத்தடுத்த படங்கள் ஹிட் கொடுக்க வேண்டும் என இளம் சென்சேஷனல் இயக்குனர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வருகிறார் ரஜினி.

அந்த வகையில் தான், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்  சென்னையில் நடைபெற்று வருகிறது.  இது ராஜின் 169வது படமாக உருவாகி வருகிறது.

இதையும் படியுங்களேன் – டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுத்த ராஜ்கிரண்… யாரு படமா இருந்தாலும் இவர் தான் ஹீரோ.! லிஸ்ட் இதோ…

இதனை அடுத்து, மீண்டும் இளம் இயக்குனர் உடன், அதுவும் டான் எனும் முதல் படம் மூலம்  மெகா ஹிட் கொடுத்த சிபி சக்கரவர்த்தியிடம் கதை கேட்டு ஓகே வாங்கி வைத்துள்ளாராம் சிபி. இந்த படம் ரஜினியின் 170 வது படமாக உருவாக உள்ளது.

இதையும் படியுங்களேன் –தனுஷ் செய்த வேலையில்தான் பாரதிராஜாவுக்கு இந்த நிலைமையா?!..இது என்னடா புதுக்கதை…..

இப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு முன்பு இதே போல தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் ரஜினி பட இயக்குனர் லிஸ்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.