தலைவர் 170 ரெடி… ஜெயிலரே இன்னும் முடியல… அதுக்குள்ளவா??

by Arun Prasad |
தலைவர் 170 ரெடி… ஜெயிலரே இன்னும் முடியல… அதுக்குள்ளவா??
X

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இதில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்திருந்தது. மேலும் சிவராஜ்குமார், தமன்னா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நெல்சன் இதற்கு முன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. ஆகையால் “ஜெயிலர்” திரைப்படத்தை சிறப்பாக எடுத்துமுடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு “தலைவர் 170” குறித்து ஒரு தகவல் வெளிவந்தது. அதாவது ரஜினிகாந்த்தின் 170 ஆவது திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார் என்று செய்திகள் பரவியது.

சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயன் நடித்த “டான்” திரைப்படத்தை இயக்கியவர். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் ரஜினிகாந்த் சிபி சக்ரவர்த்தியை நேரில் அழைத்து பாராட்டினார். அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வந்தன.

இதனை தொடர்ந்துதான் சிபி சக்ரவர்த்தி ரஜினிகாந்த்தின் 170 ஆவது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது “தலைவர் 170” குறித்த முக்கியத் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது வருகிற நவம்பர் மாதம் ரஜினிகாந்த்தின் 170 ஆவது திரைப்படத்தை குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவர உள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தின் Pre Production பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பதை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஜெயிலர்” திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கும் வேளையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் தொடங்கியது. ஆனால் அதற்குள் “தலைவர் 170” திரைப்படத்தை குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ள செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Next Story