சூப்பர் ஸ்டார் 170 மாஸ் அப்டேட்.! பாட்டெழுதுனா சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும்.!

by Manikandan |
சூப்பர் ஸ்டார் 170 மாஸ் அப்டேட்.! பாட்டெழுதுனா சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும்.!
X

தமிழ் சினிமாவின் நிலைமையை தற்போது புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதிலும் உச்ச நட்சத்திரங்களின் மன நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. உச்ச நட்சத்திரங்களாக தற்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல் ஆகியோர் அடுத்தடுத்து படங்களை தேர்வு செய்து குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

ஆனால், அஜித் மற்றும் விஜய் ஒரு படத்தை ஆரம்பித்து அதனை வெளியிட 1 வருடம் எடுத்துக்கொள்கின்றனர். அது முடியும் தருவாயில் தான் அடுத்த படத்தை பற்றி கதை கேட்கின்றனர்.

இதில் ரஜினி அடுத்தடுத்த படத்தை தேர்வு செய்வதில் மிக ஆர்வமாக இருக்கிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி தனது 169வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதே போல, 170வது திரைப்படம் பற்றி தகவல் வெளியாகி வருகிறது.

இதையும் படியுங்களேன் - எனக்கு அதற்கு உரிமை இல்லை.! என்னா வார்த்தை.!? இதுதான் எங்க தல அஜித்.!

அதாவது, இப்படத்தை அருண்ராஜா காமராஜா இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியிடம் ஒரு கதையை அருண்ராஜா கூறியதாகவும், அது ரஜினிக்கு பிடித்துப்போனதாகவும் கூறப்படுகிறது. அதனால், 170 வது திரைப்படமாக இது தயாராகும் என கூறப்படுகிறது.

அருண்ராஜா காமராஜா , கனா, நெஞ்சுக்கு நீதிஆகிய படங்களை இயக்கியுள்ளார். கபாலி திரைப்படத்தில் நெருப்புடா எனும் பாடலை எழுதி பாடியுள்ளார் அருண்ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story