குறி வச்சா இரை விழணும்!. வெளியான வீடியோ.. ‘வேட்டையன்‘ என்ன மாதிரியான படம் தெரியுமா?...

by சிவா |   ( Updated:2023-12-12 12:36:47  )
thalaivar
X

ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்துவிட்டதால் ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அதே உற்சாகத்தோடு அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார். இப்போது சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. ஜெயிலர் படம் ஹிட் அடித்த செய்தி கேட்டவுடனேயே இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார். இது ரஜினியின் 170வது திரைப்படமாகும். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் பஹத் பாசில், அமிதாப்பச்சன், ரானா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. ஜெய்பீம் படம் சமூக பிரச்சனையை பேசியது.

thalaivar

எனவே, இந்த படத்திலும் ரஜினி அதுபோன்ற கதையில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று ரஜினியின் பிறந்தநாள் என்பதால் இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலாக நடந்து வரும் ரஜினி கண்ணாடியை ஸ்டைலாக போடுகிறார். மேலும் ‘குறி வச்ச இரை விழணும்’ என வசனமும் பேசுகிறார்.

அதோடு, கையில் வைத்திருக்கும் துப்பாக்கியால் கீழே சுடுகிறார். ஊர் மக்கள் எல்லாம் அவரின் வீட்டு முன்பு நிற்க ரஜினி ஊர் தலைவர் போல ஸ்டைலாக கையை சொடுக்குகிறார். இதை வைத்து பார்க்கும்போது இந்த படமும் சமூக பிரச்சனையை பேசும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, வேட்டையன் படத்தில் அதிரடி சண்டை காட்சிகளும் இருப்பதால் கண்டிப்பாக இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story