தலைவர் பங்கம் பண்ணுறாருப்பா.. தலைவர்170 டைட்டில் முதல் ஷூட்டிங் வரை… லேட்டஸ்ட் அப்டேட் இதான்..!

Published on: December 2, 2023
---Advertisement---

Thalaivar170: ரஜினிகாந்த் தன்னுடைய ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பம்பரமாக சுழன்று வருகிறார். அவரின் அடுத்த படமான 170 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அதன் முதற்கட்ட முக்கிய அப்டேகள் வெளியாகி இருக்கிறது.

நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் வெற்றியை கோலிவுட்டையே அதிர செய்ததது. இப்படத்தின் ஹிட்டுக்கு முக்கிய காரணம் மற்ற மொழியில் இருந்து வந்த சூப்பர்ஸ்டார்களான சிவராஜ்குமார், மோகன்லால், ஷாக்கி ஷெராஃப், சுனில் ஆகியோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மருத்துவமனையில் விஜயகாந்த்.. முதல் ஆளாக களத்தில் இறங்கிய பார்த்திபன்… என்ன செய்தார் தெரியுமா?

இந்த ட்ராக்கை சரியாக பயன்படுத்தி கொள்ள ரஜினிகாந்த் முடிவெடுத்து விட்டார். அப்படத்தினை தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாக இருக்கும் படம் தலைவர்170 இப்படத்தினை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். லைகா தரப்பில் சுபாஸ்கரன் இப்படத்தினை தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்த ரோலுக்கு நானி, விக்ரம், அர்ஜூன் ஆகியோரிடம் முதலில் பேச்சுவார்த்தை நடந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுவும் இல்லாமல் இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார். 

இதையும் படிங்க: என் வாழ்க்கையில் முக்கிய 2 நடிகைகள்.. 2 இயக்குனர்கள்.. மனம் திறந்து சொன்ன விஜயகாந்த்…

படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஜனவரி கடைசிக்குள் முடித்துவிட படக்குழு முழுவீச்சில் இறங்கி இருக்கிறார்களாம். அப்போது தான் அடுத்த மே மாதத்தில் படத்தில் ரிலீஸ் செய்ய முடியும் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் திட்டமாகவும் இருக்கிறது. தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வரும் டிசம்பர் 12ல் ரிலீஸாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.