தலைவர் 171 படத்திலிருந்து அவரை தூக்க காரணம் ரஜினியா?!.. பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

by sankaran v |
Thalaivar 171
X

Thalaivar 171

சொந்த வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கை சிறிதும் குறையாமல் இருப்பதால் தான் ரஜினிகாந்த் இந்த வயதிலும் இத்தனை சோகங்கள் இருந்தாலும் கொஞ்சம் கூட மனம் தளராமல் சுறுசுறுப்புடன் இருக்கிறார். இதற்கு அவரது ஆன்மிக ஈடுபாடும் ஒரு காரணம் தான். இந்த வயதிலும் படங்களில் வேகம் குறையாமல் நடித்து வருகிறார் என்றால் அது ஆச்சரியம் தான்.

தலைவர் 171 படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் இருந்து ஒரு நடிகரைத் தூக்கி விட்டதாக புதுத்தகவலை சொல்கிறார் பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன்.

இதையும் படிங்க... விரக்தியில் விபரீத முடிவெடுத்த பிரபலம்!.. போனில் பேசி தற்கொலையை தடுத்த எம்.ஜி.ஆர்!..

லோகேஷ்கனகராஜ் உதவியாளராக இருந்த ரத்னகுமாரை அனுப்பி விட்டாராம். இதற்கு ரஜினி தான் காரணமா என நிருபர் கேட்க, அதற்கு பயில்வான் ரங்கநாதன் ‘ரஜினி எல்லாம் அப்படி சொல்லல, அவருக்குத் தன்னம்பிக்கை அதிகம். மார்க்கெட் இல்லாம இருந்த கார்த்திக், பிரபுவுக்கு எல்லாம் மறுவாழ்வு கொடுத்தவர் அவர் தான்.

தன்னோட நடிக்கும் நடிகர்கள் எல்லாரும் தன்னோட திறமையை வெளிக்கொண்டு வரணும்னு நினைப்பாராம். அவரு பரந்த மனப்பான்மை, தன்னம்பிக்கைக் கொண்டவர். அந்த விஷயத்துல ரஜினியைக் குறை சொல்ல முடியாது. அவரைப் பொறுத்த வரை மற்றவங்க விஷயத்துல தலையிடக்கூடிய ஆள் இல்ல. யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கக்கூடிய ஆள் அவரு இல்ல’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... படையப்பா படத்தில் ஷாலினி அஜித்தா? ஆனா பொண்ணு ரோல் இல்லையாம்… ஏகப்பட்ட சுவாரஸ்யமால இருக்கு!…

ரஜினிகாந்த் பிரபு நடித்த குரு சிஷ்யன், ரஜினி கார்த்திக்குடன் நடித்த நல்லவனுக்கு நல்லவன் ஆகிய படங்களைப் பார்த்தால் தெரியும். தன்னுடன் நடித்த பிரபு, கார்த்திக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கேரக்டர்களைக் கொடுத்திருப்பார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 171 படத்தில் ஷாருக்கான், ரன்வீர் சிங் கோமியோ ரோல்களில் நடிக்கிறார்களாம். அனிருத் இசை அமைக்கிறார். அன்பறிவ் படத்தில் சண்டைக்காட்சிகளைக் கவனிக்கிறார். படத்திற்கான போஸ்டர் பரபரப்பாக வெளியானது. பர்ஸ்ட் லுக், டீசர் இந்த மாதத்தில் வெளியாகும் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story