More
Categories: Cinema News latest news

லியோவுக்கு ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ்!.. தலைவர் 171க்கு இந்த ஹாலிவுட் படமா?.. என்னய்யா லோகி என்ன ஆச்சு?..

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக திரைக்கதை எதையும் எழுதாமல் ஹாலிவுட் படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகி அன்பறிவு மாஸ்டர் கொண்டு படங்களை இயக்கி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தளபதி விஜய்க்கு கடைசியாக அவர் கொண்டு வந்த கதை ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் கதை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அந்த படத்தில் இருந்து இன்ஸ்பயர் ஆகி அந்த படத்தை எப்படி நம்ம ஊர் ஹீரோவுக்கு எடுக்கிறேன் பாருங்கள் என வச்சு செய்து விட்டார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சரியா நடிக்க முடியல!.. கதறி அழுத நடிகர் திலகம்!.. ஆறுதல் சொல்லி தூக்கிவிட்ட இயக்குனர்!..

இந்நிலையில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 ஆவது படமும் ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் என்ன தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் ரஜினிகாந்த் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நிலையில் அவர்களுக்கு புதிதாக ஒரிஜினல் கதையைக் கூட கொடுக்க இங்குள்ள இயக்குனர்களால் முடியவில்லையா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: கேன்சர்னு தெரிஞ்சும் அப்பா சொன்ன விஷயம்!.. மனமுடைந்து பேசிய விசு மகள்கள்.. மனைவி சொன்ன ஷாக் விஷயம்!

ஹாலிவுட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான Purge படத்தின் தழுவல் தான் தலைவர் 171 வது படம் என தற்போது தகவல்கள் வைரலாகி வருகின்றன. அமெரிக்கா அரசாங்கம் ஆண்டுக்கு ஒரு 12 மணி நேரம் கொலை உள்பட அனைத்து குற்றச் செயல்களும் லீகல் என அமல்படுத்தப்பட அந்தப் 12 மணி நேரத்தில் நடக்கும் கதைதான் பர்ஜ் திரைப்படத்தின் கதை.

கைதி படத்தைப் போல ஒரே இரவில் நடக்கும் கதையை தலைவர் 171 வது படத்துக்கும் லோகேஷ் கனகராஜ் கொண்டு வரப் போகிறாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. அந்த படமாக இருந்தால் திரைக்கதை, மேக்கிங் என லோகேஷ் கனகராஜ் லியோவை விட பயங்கர மாஸ் காட்டி விடுவார் என்றும் ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். இங்கேயும் ஏதாவது பிளாஷ்பேக் வைக்கிறேன் என சொதப்பாமல் இருந்தால் சரி.

இதையும் படிங்க: தன் ரோல் டம்மியென தெரிந்தும் ரஜினிக்காக நடித்த சிவாஜி.. அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்டே!

 

Published by
Saranya M

Recent Posts