ஸ்ருதிஹாசனோட சுத்துறதா பேச்சு!.. அத மாத்தத்தான் அந்த வேலையை பண்ணாரா லோகேஷ் கனகராஜ்?..

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து ‘இனிமேல்’ பாடல் ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். அது ரிலீஸ் ஆகும் வரை இருந்த விவாதங்கள் அது வெளியானதும் அப்படியே அடங்கி விட்டது.

அந்த பாடல் பற்றிய பேச்சுக்கள் அதிகம் எழாமல் சேப்பாக்கம் மைதானத்துக்கு ஸ்ருதிஹாசன் உடன் லோகேஷ் கனகராஜ் சென்றது, பப்பில் நைட் பார்ட்டி பண்ண வீடியோ வெளியானது என லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் உடன் சுற்ற ஆரம்பித்துள்ளாரே ஏன் என பலரும் வேறுமாதிரி பேச ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படிங்க: ஆடு ஜீவிதம் எதிர்பார்த்த அளவுக்கு கல்லா கட்டியதா?.. முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் ரசிகர்கள் தலைவா இந்த லோகேஷ் கனகராஜ் நமக்கு வேண்டாம் பாஸ் விஜய்க்கு செஞ்சு விட்டதை போல உங்களுக்கும் செஞ்சி விட்டுவிடப் போகிறார் என பதிவுகளை போட ஆரம்பித்து விட்டனர்.

இந்த சர்ச்சைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் திடீரென ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டிலையே வெளியிட்டு ரசிகர்களை அப்படியே திசை திருப்பி விட்டார் லோகேஷ் கனகராஜ் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வடிவேலு பேசிய பஞ்சு! ரஜினி பேசுற அளவுக்கு famous ஆச்சு.. என்ன டையலாக் தெரியுமா?

ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் டாப்பிக்காக தற்போது இதுதான் வைரலாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில், அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டன்ட்டில் இந்த படம் உருவாக உள்ளது.

படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெறவே 4 மாதங்கள் தேவைப்படும் என்றும் ஜூன் மாதத்திற்கு மேல் தான் சூட்டிங் ஆரம்பிக்கும் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சொல்லி வந்த நிலையில், திடீரென தலைவர் 171 படத்தின் போஸ்டர் வெளியிட இதுதான் காரண்மா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

Related Articles
Next Story
Share it