தலைவர் 171 படத்தின் கதை இதுதான்... ரசிகனுக்காக ரஜினி செய்யப் போகும் தரமான சம்பவம்..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தைப் பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

ஒரு வாட்ச் ரிப்பேர் கடை வைத்துள்ள ஹீரோவின் கடையை குறிப்பிட்ட ஆள்கள் அவங்க கன்ட்ரோலுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். என்ன காரணத்திற்காக அப்படிப் போனது என்பது தான் கதை.

இதையும் படிங்க... இளையராஜாவிடம் தேவா பாட்ட பாடி மெட்டு கேட்ட இயக்குனர்!.. என்னாச்சி தெரியுமா…

லோகேஷ்கனகராஜ் ஸ்ருதிஹாசனுடன் இனிமேல் வீடியோ ஆல்பத்தில் நடித்தார். தொடர்ந்து அதில் ஈடுபாடு காட்டி வந்ததால் ரஜினி உடனடியாக தலைவர் 171க்கான பர்ஸ்ட் லுக்கை வெளியிடச் செய்தார் என்றும் கூறப்பட்டது.

துடிக்கும் கரங்கள் படம் ஊட்டியில் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. டிசம்பர் 11 ம் தேதி படப்பிடிப்பு நடந்து வந்தது. மறுநாள் அவருக்குப் பர்த் டே. மறுநாள் படப்பிடிப்பின் போது யூனிட்டே திருவிழா மயமானது. ஏன் இதெல்லாம் என்று ரஜினி கேட்ட போதும், நீங்க கொண்டாடப்பட வேண்டியவர். இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றாராம் இயக்குனர் ஸ்ரீதர்.

ரஜினி தன்னோட ரசிகனுக்காக ஒரு படத்தின் கதையையே மாற்றினாராம். அதாவது பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனம் வந்தபோதும் ரஜினிகாந்த் தன்னோட ரசிகனுக்காக மொத்த கதையையும் மாற்றினாராம். நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் ரஜினி உள்ளே இறங்கி சில வேலைகள் செய்ததால் தான் ஹிட்டானதாம்.

இதையும் படிங்க... மகிழ்திருமேனிகிட்ட அந்த பருப்பெல்லாம் வேகாது.. ‘விடாமுயற்சி’ பற்றி வாய்திறந்த நடிகை

சாதாரண பாமர ரசிகனுக்கு ரஜினி படம் பார்க்கும் போது ஒரு சந்தோஷம் வர வேண்டும். விசில் அடித்து கைதட்ட வேண்டும் என்பது தான் ரஜினியின் விருப்பம். 190 ரூபாய் கொடுத்து விட்டு தியேட்டரில் விசில் அடித்து தலைவா என கத்துகிறான் ரசிகன்.

அவன் எதை ரசிக்கிறான் என்பதை ரஜினிகாந்த் விரல் நுனியில் தெரிந்து வைத்து இருப்பார். அவனோட விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் சில காட்சிகளை சேர்ப்பார். அது தலைவர் 171லும் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் செய்யாறு பாலு.

 

Related Articles

Next Story