தலைவர் 171 பட டைட்டில் இதுதான்!.. வெளியான வீடியோ!. இது நம்ம சரத்குமார் பட டைட்டில் இல்ல!...

by சிவா |   ( Updated:2024-04-22 07:22:45  )
தலைவர் 171 பட டைட்டில் இதுதான்!.. வெளியான வீடியோ!. இது நம்ம சரத்குமார் பட டைட்டில் இல்ல!...
X

ஜெயிலர் படத்தின் மெகா வெற்றி ரஜினியை மீண்டும் சுறுசுறுப்பாக்கி இருக்கிறது. மளமளவெனெ 3 படங்ளை புக் செய்தார். ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கிற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

ஒருபக்கம், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்தார். அந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால், தனது 171வது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் ரஜினி, இந்த கூட்டணி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: விஜயை காப்பி அடிக்கிறீங்களா? சைக்கிளில் வந்த ரகசியத்தை பகிர்ந்த விஷால்.. நிலைமை மோசமா இருக்கு போல

ஏனெனில், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களுக்கு பின் லோகேஷ் கனகராஜுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக இளசுகளுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக லோகேஷ் மாறி இருக்கிறார். இவர் எடுக்கும் படங்களை லோக்கி யூனிவர்ஸ் என ரசிகர்கள் சொல்ல துவங்கிவிட்டனர்.

விஜயை வைத்து லோகேஷ் இயக்கி வெளியான லியோ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை சரியில்லை என பலரும் சொல்ல, அதை லோகேஷ் கனகராஜும் ஏற்றுகொண்டார். இந்நிலையில்தான் தலைவர் 171 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

coolie

இந்நிலையில், தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டிஒருக்கிறது. இது பி.வாசு இயக்கத்தில் சரத்குமார் நடித்து 1995ம் வருடம் வெளிவந்த படத்தின் தலைப்பு ஆகும். தற்போது அது ரஜினிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்ற சம்போ சிவ சம்போ பாடலில் வரும் வரிகளை சொல்லிய படி ரவுடி கேங்கை ரஜினி அடித்து துவம்சம் செய்யும் காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கிறது. ரஜினி மிகவும் ஸ்டைலாகவும், இளமையாகவும் இருப்பது போல அவரின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த டைட்டில் டீசர் வீடியோ ரஜினி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Next Story