Categories: latest news

தலைவர்171 திரைப்படத்தை தயாரிக்க இருந்தது இந்த நடிகரா? அட மிஸ் பண்ணிட்டாரே!…

Thalaivar171: ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்171 திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் அது குறித்த சில ஆச்சரிய தகவலும் கசிந்து இருக்கிறது. போஸ்டரில் இருக்கும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து வைப்பவர்கள் ஒரு பக்கம். தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் ஒரு பக்கம் என கசிந்து இருக்கிறது.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் பிஸியாக தொடர்ந்து நடித்து வருகிறார். டிஜே ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறது. அதன் ஷூட்டிங்கும் இந்த மாத இறுதியில் முடிந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர்171 திரைப்படம் உருவாக இருக்கிறது.

இதையும் படிங்க: விஜயகாந்துக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த ராவுத்தர்!… சிகிச்சையே வேண்டாமென கோமோவிற்கு சென்ற சோகம்!

இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. நேற்று இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. கையில் வாட்சை விலங்காக கட்டிக்கொண்டு ரஜினி இருப்பது போலவும் பின்னாடி டைம் மெஷின் இருப்பது போலவும் அமைத்து இருந்தனர்.

இந்த போஸ்டரை வைத்துப் பார்க்கும்போது தலைவர் 171 டைம்  டிராவல் திரைப்படமாக அமையலாம் என கூறப்படுகிறது. முக்கியமாக இப்படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கின்றனர். கோலிவுட்டில் வில்லனாக வேண்டும் என்பது தான் ரஜினியின் ஆசை. அதற்காகவே இந்த படத்தை அவர் ஒப்புக்கொண்டு இருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் தொடங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: கோலிவுட்டில் நம்பர் ஓன்…சம்பளமே இத்தனை கோடி… யார் அந்த நடிகை…காலியான லேடி சூப்பர்ஸ்டார்…

 இது மட்டுமில்லாமல் முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருந்தது. பின்னால் அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் அந்தக் கதை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மாறியிருக்கலாம் எனவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 

Akhilan

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

18 minutes ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

1 hour ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

11 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

12 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

13 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

14 hours ago