தலைவர் 171 படத்துக்கு வில்லன் இவர் தானா? அதுக்கு ரஜினிக்கே டபுள் ஆக்‌ஷன் போட்றலாம்.. ரெண்டு ஒன்னு தான்..!

Thalaivar171: லியோ பரபரப்பை தாண்டி தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படமான தலைவர் 171ல் பிஸியாகி இருக்கிறார். அதன் வேலைகளும் தொடங்கிய நிலையில் வில்லன் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூல் செய்து இருப்பதாக கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக நிறைய கேலி பேசப்பட்டது. இதற்கு லோகேஷ் என்ன காரணம் கொடுத்தாலும் அதை பலர் ஏற்றுக்கொள்ள கூடிய நிலையில் இல்லை.

இதையும் படிங்க: சின்னவீடு படத்தால் நடந்த களேபரம்… கடைசியில் மன்னிப்பே கேட்கும் நிலைக்கு போனாராம் பாக்கியராஜ்..!

இந்த பிரச்னை ஒருபுறம் சென்று கொண்டு இருக்க லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படமான தலைவர்171ல் பிஸியாகி இருக்கிறார். அதன் முதற்கட்ட பணிகளும் வரிசையாக தொடங்கப்பட்டு இருக்கிறதாம். திரைக்கதை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் ஆரம்பித்து விட்டதாம்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லனை தேர்வு செய்ய லோகேஷ் இறங்கி இருக்கிறார் என்றும். அந்த படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸை நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ரஜினியின் தீவிர பற்றாளராக இருக்கும் ராகவா லாரன்ஸை இது ஒப்புக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் சொல்லாதத அஜித் என்கிட்ட சொன்னாரு! இவ்ளோ பர்ஷனல இப்படியா ஓப்பனா சொல்றது?

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வசூலை பெறவில்லை. சுமார் விமர்சனத்தினை பெற்ற நிலையில் லாரன்ஸை வில்லனாக போடுவதற்கு ரஜினியே டபுள் ஆக்‌ஷனில் பண்ணிவிடலாம். அவர் எப்படியோ ரஜினியை தானே இமிடேட் செய்வார் எனவும் பேச்சுகள் தொடங்கி இருக்கிறது.

 

Related Articles

Next Story