யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்!.. உயில்லையே இத எழுத போறேன்!.. எஸ்.பி.பி சொன்னது இதுதான்!..
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் பாட துவங்கியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இளையராஜாவின் இசையில் பாட துவங்கிய பின் உச்சம் தொட்டார் எஸ்.பி.பி. பல இனிமையான பாடல்களை ராஜாவின் இசையில் பாடி அசத்தினார். ராஜாவின் இசையில் நடிகர்கள் மோகன், கமல்ஹாசன், ரஜினி, விஜயகாந்த், ராமராஜன் போன்றவர்களுக்கு பல இனிமையான பாடல்களை பாடி அசத்தினார்.
ராஜாவுக்கும், எஸ்.பி.பிக்கும் இடையே இருந்த நட்பும், கெமிஸ்ட்ரியும் ரசிகர்களுக்கு தேன் போன்ற பல பாடல்களை தந்தது. அதுவும் ஜானகியுடன் இணைந்து எஸ்.பி.பி பாடிய பல நூறு பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாக இருக்கிறது. இப்போதும் பலர் காரில் செல்லும்போது கேட்பது இளையராஜாவின் இசையில் உருவான எஸ்.பி.பி பாடல்களைத்தான்.
இதையும் படிங்க: 9 பேரை காவு வாங்கிய விபத்து! அப்டேட்ங்கிற பெயரில் இப்படியா பண்றது? அறியாமையில் செய்தாரா அஜித்?
70களில் துவங்கி சுமார் 50 வருடங்களுக்கும் மேல் 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். ரஜினிக்கு ஒப்பனிங் சாங் மாஸாக அமைந்ததற்கு காரணமே எஸ்.பி.பிதான். இளையராஜா மட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசகர், பரத்வாஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பல இனிமையான பாடல்களை பாடியிருக்கிறார்.
மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடி அசத்தி இருக்கிறார். அதோடு, பாடகராக மட்டும் இருந்துவிடாமல் பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். சில படங்களை தயாரித்திருக்கிறார். சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இது எல்லாவற்றையும் விட பழகுவதற்கு ஒரு இனிமையான மனிதராக, எல்லோருக்கும் பிடித்த ஒரு நபராக கடைசி வரை இருந்தார் எஸ்.பி.பி. அதனால்தான் அவர் மரணமடைந்த போது தமிழ்நாடே அவருக்காக அஞ்சலி செலுத்தியது.
இதையும் படிங்க: என்ன கோபி இப்படி பாக்கியாக்கிட்ட மொக்கை வாங்கிட்டீங்களே… இதான் ஓவரா பேசக்கூடாது!…
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய் ‘தலைவாசல் படத்தில் எஸ்.பி.பி. சாருடன் நடித்தேன். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே அவரின் இசைக்கச்சேரிகளை பார்க்க போவேன். அந்த படத்தில் அவரை தூக்கி வருவது போல ஒரு காட்சி வரும்’.
காட்சி எடுக்கப்பட்டதும் என்னிடம் வந்து ‘நான் ரொம்ப வெயிட்டா இருந்தேனா?.. நான் இறந்தாலும் யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது. என் உடம்பை யாரும் சுமக்கக் கூடாது. வண்டியில்தான் வைத்துதான் எடுத்து போக வேண்டும் என உயில் எழுத போகிறேன்’ என என்னிடம் சொன்னார். அப்படிப்பட்ட மகா மனிதர் அவர்’ என தலைவாசல் விஜய் கூறியிருந்தார்.