மண்ணை கவ்விய தலைவி... ஓடிடி மட்டும் இல்லனா தலையில துண்டுதான்!....

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்டார் ஏ.எல்.விஜய். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டவுடன் நாங்கள் ஜெ.வின் உண்மை வாழ்க்கையை எடுக்கவில்லை. அவரை பற்றி எழுதப்பட்ட ஒரு நாவலைத்தான் எடுக்கிறோம் என நீதிமன்றத்தில் தெரிவித்தார். அங்கேயே படத்தின் தோல்வி துவங்கியது.

thalaivi2

மக்களால் விரும்பப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை நியாயமாக பதிவு செய்வதுதான் பயோகிராபி. முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை பதிவிட வேண்டும். அப்போதுதான் அது அது ரசிகர்களை சென்றடையும்.

ஆனால், தலைவி திரைப்படம் உண்மை கொஞ்சம், கற்பனை கொஞ்சம், மீதி மிகைப்படுத்துதல் என திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதிமுகவின் கோபத்தை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக ஜெ.வின் கதாபாத்திரத்தை தூக்கி பிடித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதுவே படத்தின் தோல்விக்கு காரணமானது.

thalaivi3

தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் விற்பனை செய்வதற்காக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெ.வின் வேடத்தில் நடித்தார். ஏ.எம். வீரப்பன் வேடத்தில் சமுத்திரக்கனியும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமியும் நடித்தனர். ஆனால், இப்படம் ரசிகர்களை கவரவில்லை.

thalaivi4

திரையரங்குகளில் வெளியான இப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கவில்லை. மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ஓடிடியில் விற்கப்பட்டதால் நஷ்டம் அடையாமல் தப்பித்தார் இப்படத்தின் தயாரிப்பாளர்.

ஓடிடி இல்லாமல், முழுக்க முழுக்க தியேட்டரை மட்டும் நம்பி இருந்திருந்தால் படம் பல கோடி நஷ்டங்களை சந்தித்து தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டிருப்பார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

 

Related Articles

Next Story