தியேட்டரில் படம் பிளாப்.. ஆனால் ஓடிடி-யில் மாஸ் காட்டும் தமிழ் படம்!

by adminram |
தியேட்டரில் படம் பிளாப்.. ஆனால் ஓடிடி-யில் மாஸ் காட்டும் தமிழ் படம்!
X

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அரவிந்தசாமி மற்றும் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்கில் வெளியான படம் 'தலைவி'. இப்படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய் இயக்கத்தில் கடைசியாக வெளியான வாட்ச்மேன், தேவி ஆகிய படங்களும் வெற்றியைப் பெற்றதால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார்தான் இப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியடைந்தது. இப்படம் மக்களுக்கு மட்டுமின்றி அதிமுகவினருக்கும் பிடிக்கவில்லை.

thalaivi

படத்தைப்பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட சிலர், இப்படத்தில் ஒருபகுதி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது, மற்றொரு பகுதியை படம் பேசவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். படம் தியேட்டரில் வெளியான நாளே ஓடிடி-யில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கில் தியேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நான்கு வாரங்களுக்குப் பின் ஓடிடி-யில் வெளியாகும் என அறிவித்தனர். இதையடுத்து மலையாளம், கன்னடம், ஹிந்தியில் இப்படம் தியேட்டரில் வெளியான அதே நாளில் ஓடிடி-யில் வெளியானது.

ஹிந்தியில் இப்படத்தை ஓடிடி-யில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துள்ளனர். ஹிந்தியில் இப்படத்திற்கு ஓடிடி-யில் நல்ல வரவேற்பு ஏற்பட்டதையடுத்து தமிழிலும் இப்படத்தின் ஓடிடி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. கண்டிப்பாக ஓடிடி-யில் இப்படம் வெற்றிபெறும் என கூறுகின்றனர்.

Next Story