ரசிகர்களை ஏமாற்ற போகும் தளபதி66 படக்குழு.! விஜய் பிறந்தநாளில் யாரும் இதை எதிர்பார்க்கல...
தனது விஜய் நடிப்பில் தற்போது அவரது 66வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரித்து வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார்.
சமீபத்திய விஜய் திரைப்படங்கள் போல ஆக்சன் கதைகளமாக இல்லாமல், இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பம் குடும்ப சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறதாம்.
இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். சரத்குமார், பிரபு, யோகி பாபு என நடிகர் பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது.
வழக்கமாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த திரைப்பட போஸ்டர் வெளியாகும். அந்த போஸ்டரில் எப்போதும் விஜய் மட்டும் தான் இருப்பார். இதுவரை வெளியான திரைப்படங்களில் அப்படித்தான் இருந்தது.
வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளன்று வெளியாகப்போகும் போஸ்டர் தற்போது தயாராகி வருகிறதாம். அதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து 13 நடிகர்கள் நடிக்க போஸ்டர் தயார் செய்து வருகின்றனராம்.
இதையும் படியுங்களேன் - எனக்கும் என் புருஷன்களுக்கும் ராசி இல்லை.! விக்ரம் பட நடிகையின் கலக்கல் பதில்.!
இது குடும்ப திரைப்படம் என்பதால், அனைவரும் இருக்கும்படியான ஒரு குடும்ப புகைப்படத்தை எடுத்து அதனை முதல் போஸ்டராக வெளியிட உள்ளனராம்.
இதற்காக விஜய் ஒரு நாள் கால்ஷீட் ஒதுக்கி போட்டோக்கு போஸ் கொடுத்து வருகிறாராம். வரும் ஜூன் 22ஆம் தேதி எந்தமாதிரியான போஸ்டர் வெளியாகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.