மெர்சல், பிகில், மாஸ்டர் என தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வசூல் சக்கரவர்த்தியாக மாறியிருந்தார் தளபதிவிஜய். அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல்களை மற்ற நடிகர்கள் தொடக்கூட முடியாது எனும் நிலைமையில் இருந்த விஜய்க்கு அடுத்ததாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
தற்போதைய நிலைமையே வேறு. பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இப்படம் விஜய் ரசிகர்களையே திருப்திபடுத்த தவறியுள்ளது என்ற கருத்துக்களே உலா வருகிறது.
தற்போது விஜய் தனது 66வது திரைப்படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜை நடைபெற்றபோது, சரத்குமார் கலந்து கொண்டார். அப்போதே சரத்குமார் படத்தில் இருப்பது உறுதியாகி இருந்தது. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது.
தற்போது கிடைத்த தகவலின்படி சரத்குமார் வில்லனாக இந்த படத்தில் நடிக்கிறாராம். என்ற தகவல் வெளியாகி உள்ளது. சரத்குமார், அர்ஜுன் போன்ற நாயகர்கள் திரைப்படங்களில் நாட்டுப்பற்று உள்ள நேர்மையான போலீஸ் அதிகாரி போன்ற கதாபாத்திரங்களில் ரசிகர்கள் பார்த்து விட்டார்கள். ஆதலால் அவர்கள் வில்லன் வேடத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். இதற்கு அவர்கள் முந்தைய நடித்த திரைப்படங்களை சாட்சி.
இதையும் படியுங்களேன் – ஏன் நான் அத பண்ண கூடாதா.?! விபரீத முடிவு எடுத்துள்ள விஷால்.!
இப்படி இருக்கும் நிலைமையில் சரத்குமாரை வில்லனாக நடிக்க வைக்கும் முயற்சி விபரீதமானது என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தாலும் இயக்குனர் வம்சி நம்பிக்கை வைத்து சரத்குமாரை நடிக்க வைத்து வருகிறார். படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் போது தான் சரத்குமாருக்கு இதில் என்ன கதாபாத்திரம் இருக்கிறது என்பது உறுதியாக வெளியாகும்.
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…