
Cinema News
ஸ்மார்ட் விஜய்….க்யூட் ராஷ்மிகா….தாறுமாறா வைரலாகும் தளபதி 66 பூஜை புகைப்படங்கள்….
பீஸ்ட் படத்துக்கு பின் நடிகர் விஜய் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். மேலும், தெலுங்கில் அதிக பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். மேலும், தெலுங்கில் பல ஹிட் படங்களுக்கு இசையமைக்கும் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய், ராஷ்மிகா மற்றும் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் சரத்குமார் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பூஜையோடு சேர்த்து இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியது.
இப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.