
Cinema News
அதயே மறந்துட்டாரா…? தளபதி – 66 மூலம் மீண்டும் கொண்டு வருகிறார் விஜய்…!
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் தளபதி – 66. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,சரத்குமா, நடிகர் ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு முதன்முறையாக விஜய்க்காக தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பூஜை ஏற்கெனவே ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படபிடிப்பு மே3 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.இதற்கான செட் போடப்பட்டுள்ளது.அது முடிந்தவுடன் மீண்டும் மீதி படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் தான் நடைபெறவுள்ளது.
ராஷ்மிகா மந்தனா ஜோடியாகவும், சரத்குமார் விஜய்க்கு அப்பாகவும், ஷியாம் அண்ணனாகவும் நடிக்க உள்ளனர். மற்ற எல்லா கதாபாத்திரங்களுக்கும் தேர்வு நடந்து முடிந்து விட்டது. இன்னொரு தகவல் என்னவெனில் இந்த படத்தில் சண்டை காட்சிகளே கிடையாதாம்.
பக்கா செண்டிமென்ட் படமாக இருக்குமாம். 90 களில் காட்டிய விஜய்யை அப்படியே இந்த படத்தில் காட்ட திட்டமிட்டுள்ளனர். 2000 களில் இருந்து எல்லா இயக்குனர்களும் விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாகவே காட்டியுள்ளதால் அவரின் நடிப்பு மறைக்கப்பட்டு விட்டதாம்.அதனால் மீண்டும் அந்த நடிப்பை கொண்டுவரும் படமாக இது அமையும் எனக் கூறுகின்றனர் படக் குழுவினர்.