“தளபதி 67 இந்த ஹாலிவுட் படத்தோட ரீமேக்தான்”… என்னப்பா சொல்றீங்க??
விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார், குஷ்பு, யோகிபாபு, சங்கீதா என பலரும் நடித்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு பல செய்திகள் பரவி வந்தன.
ஆனால் சமீபத்தில் தீபாவளியன்று “வாரிசு” திரைப்படத்தின் பிரத்யேக போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இதன் மூலம் இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியது.
எனினும் ரசிகர்கள் “வாரிசு” திரைப்படத்தை விடவும் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் “தளபதி 67” திரைப்படத்திற்குத்தான் மிகுந்த ஆவலோடு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
“தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய “மாஸ்டர்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. அதே போல் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வசூலை குவித்து தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க வெற்றித்திரைப்படமாக அமைந்தது.
இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. ஆதலால் “தளபதி 67” திரைப்படத்திற்கு ரசிகர்கள் வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் “தளபதி 67” திரைப்படத்தை குறித்த ஒரு சூடான தகவல் தற்போது கசிந்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான “எ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” என்ற திரைப்படத்தைத்தான் “தளபதி 67” திரைப்படமாக ரீமேக் செய்யப்போகிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
“எ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” ( A History of Violence) திரைப்படம் ஒரு அட்டகாசமான கேங்கஸ்டர் திரைப்படம். ஒரு வேளை இத்திரைப்படத்தை ரீமேக் செய்தால் அற்புதமான திரைப்படமாக இருக்கும் என பல ரசிகர்கள் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.