Connect with us

Cinema News

விஜய் ‘அந்த’ ஆட்டத்துல கிடையாது.! வெளியான ரகசிய தகவல்.. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..

தளபதி விஜய் தற்போது அவரது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு பட சூப்பர் ஹிட் இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தமிழ் – தெலுங்கு என இருமொழி திரைப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தெலுங்கு பிரமாண்ட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். விஜயின் வழக்கமான ஆக்சன் படம் போல இது இருக்காது. இப்படம் ஒரு குடும்ப திரைப்படமாக இருக்கும் என படக்குழு கூறி வருகிறது.

lokesh1_cine

ஆனால், இந்த படம் மீதான எதிர்பார்ப்பை காட்டிலும், இன்னும் அறிவிக்கப்படாத தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் அதிகமாக ரசிகர்கள் மனதில் இருக்கிறது என்றே கூறலாம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – இங்க வா… அழகாய் பந்து விளையாடும் செல்ல குட்டி கீர்த்தி சுரேஷ்.! ஆனா, மண்ட பத்திரம்….

விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் கைதி படத்தின் கனெக்சன் சேர்த்து லோகேஷ் தனி சினிமா உலகத்தை ஆரம்பித்து விட்டார். அது போல தளபதி 67 படமும் அந்த உலகிற்குள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் தற்போது வெளியான தகவலின் படி, தளபதி 67 திரைப்படம் தனி படமாக தான் உருவாக்குமாம். அதன் பிறகு லோகேஷ் இயக்கத்தில்  தயாராகும் விக்ரம் , கைதி அடுத்த பாகங்கள் தான் லோகேஷ் சினிமா உலகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ந்துவிட்டனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top