விஜயின் கெரியரிலேயே உச்சக்கட்ட வியாபாரம்!.. தளபதி - 67 சாட்டிலைட் உரிமத்தை அதிக தொகைக்கு வலைச்சுப் போட்ட நிறுவனம்!..

by Rohini |
vijay
X

vijay

விஜயின் வாரிசு படம் வெளியாகி பல கோடிகளில் வியாபாரமும் வசூலும் பெற்ற நிலையில் இப்போது தளபதி - 67 படத்தின் வியாபாரமும் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கெனவே வாரிசு படம் வெளியாகி முதல் 5 நாள்களில் 150 கோடி வசூலும் அடுத்த 7 நாள்களில் 210 கோடி வசூலும் 11 நாள்களில் 250 கோடி வசூலும் பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியானது.

vijay1

vijay1

இதனிடையே வாரிசு படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல அமேசான் நிறுவனம் கைப்பற்றியதாக சில தகவல்கள் வெளியாகியது. அடுத்ததாக விஜய் லோகேஷுடன் இணையப்போகும் படமான தளபதி - 67 படத்திற்கான படப்பிடிப்புகளும் ஆரம்பமாகிவிட்டன.

ஏற்கெனவே படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடக்கும் என்றும் அங்கு விஜய் - மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளன. அதன் பிறகே மற்ற நட்சத்திரங்கள் இணையும் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது.

vijay2

vijay2

கிட்டத்தட்ட கொடைக்கானலில் மட்டும் 30 நாள்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தளபதி - 67 படத்திற்கான சாட்டிலைட் உரிமத்தை மிகப்பெரிய தொகைக்கு சன் டிவி நிறுவனம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுவரை விஜயின் கெரியரிலேயே இந்த அளவு தொகைக்கு வியாபாரம் நடந்ததில்லை என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் வாரிசு படத்தின் சாட்டிலைட் உரிமத்தைக் கூட சன் டிவி நிறுவனம் தான் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி - 67 படம் லோகேஷின் LUC கீழ் வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story