தளபதி 67 டைட்டில் இதுதான்!! ரோலக்ஸ்க்கே பாஸ் அவர்தானாம்?? வேற லெவல்...

by Arun Prasad |   ( Updated:2022-10-09 04:05:43  )
தளபதி 67 டைட்டில் இதுதான்!! ரோலக்ஸ்க்கே பாஸ் அவர்தானாம்?? வேற லெவல்...
X

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரபு, ஷாம், குஷ்பு என பலரும் இதில் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் இத்திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது.

எனினும் ரசிகர்கள் “வாரிசு” திரைப்படத்தை விட “தளபதி 67” திரைப்படத்திற்குத்தான் வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர். எப்போது “தளபதி 67” குறித்த அப்டேட் வரும்? என இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிடம் கேள்விகள் கேட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய “மாஸ்டர்” திரைப்படம் வேற லெவல் ஹிட் ஆனது. ஆதலால் “தளபதி 67” திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் “தளபதி 67” திரைப்படத்தை குறித்து சூடான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது “தளபதி 67” திரைப்படத்தில் விஜய் மும்பை டான் ஆக நடிக்கிறாராம். “விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்திற்கு பாஸ் ஆக வருகிறாராம் விஜய். ஆதலால் இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸூக்குள் வரும் என கூறப்படுகிறது.

மேலும் “தளபதி 67” திரைப்படத்திற்கு “ராய்ஸ்” என பெயர் வைத்திருக்கிறாராம் லோகேஷ். இவ்வாறு பல சூடான தகவல்கள் வெளிவருகின்றன. எனினும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் “தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கும்.

“வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. அதற்கு பிறகுதான் லோகேஷ் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவார். எனினும் தற்போது வெளிவந்த தகவல்களால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு இருக்கின்றனர்.

Next Story