லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்த நாளில் இருந்து ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குள்ளானார்கள். எப்போது இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவரும் என காத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு “தளபதி 67” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. மேலும் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
Also Read
இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

நேற்று இத்திரைப்படத்தின் டைட்டில் 3 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வ செய்தியை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன் படி இன்று மாலை 5 மணிக்கு “தளபதி 67” திரைப்படத்தின் டிரைலர் வெளிவருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது “தளபதி 67” திரைப்படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படத்திற்கு “Leo” என டைட்டில் வைத்துள்ளனர். இந்த டைட்டிலை பார்த்த ரசிகர்கள் பட வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“தளபதி 67” திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வருவதாக ஒரு தகவலும் வெளிவருகிறது. ஆதலால் இத்திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



