More
Categories: Cinema News latest news

தளபதி 67 பட டைட்டிலால் புகழின் உச்சிக்கே போன அஜித்!… இது என்னப்பா வம்பா இருக்கு?..

பெரிய எதிர்பார்ப்புடன் தளபதி – 67 பட டைட்டில் வெளியாகி ரசிகர்களின் உற்சாகத்தை பூர்த்தி செய்ததா இல்லையா என்று தெரிவதற்கு முன் அதற்குள்ளாகவே சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் படம் தான் தளபதி – 67.

vijay

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் படத்தில் அர்ஜூன், சாண்டி, மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர். படத்திற்கான முதல் செட்யூல் முடிந்து அடுத்த செட்யூலுக்காக படக்குழு தனி விமானத்தில் காஷ்மீர் பறந்திருக்கிறது.

Advertising
Advertising

இந்த நிலையில் நேற்று முன் தினம் படத்திற்கான பூஜை வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் படத்திற்கான டைட்டிலை வெளியிட்டுள்ளது படக்குழு. அதுவும் விக்ரம் பட பாணியில் ஒரு புரோமோ வீடியோ உருவாக்கி அதன் மூலம் அந்த டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.

vijay

‘லியோ’ என்ற பெயரில் தளபதி – 67 படத்திற்கான டைட்டில் வெளியாகியுள்ளது. வழக்கம் போல விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் டைட்டிலை கொண்டாட மறுபக்கம் அதற்கான சர்ச்சை பேச்சுக்களும் வதந்திகளும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமில்லாமல் இந்த சர்ச்சையிலயும் அஜித் பெயரை வைத்து தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சமீபகாலமாக வெளியான அஜித்- விஜய் படங்களை எடுத்துக் கொண்டால் நேர்கொண்ட பார்வை, வலிமை, விஸ்வாசம், துணிவு போன்ற படங்களின் பெயர்கள் தமிழிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் விஜயின் மாஸ்டர், பீஸ்ட், இப்பொழுது வெளியான லியோ போன்ற படங்கள் ஆங்கிலத்திலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் விதிவிலக்காக வாரிசு மட்டும் தமிழில் இடம்பெற்றிருந்தன.

ajith vijay

ஆங்கிலத்தில் வைத்தாலுமே அதை தமிழில் மொழிமாற்றம் செய்தால் ஏற்கெனவே இருந்த தமிழ் படங்களின் பெயர்களை தான் ஆங்கிலத்தில் வைத்திருக்கிறார்கள். மாஸ்டர் என்றால் வாத்தி, வாத்தியார் என்ற படம், பீஸ்ட் என்றால் பேய் , பிசாசுவை குறிக்கும். அதை ஏற்கெனவே பிசாசு என்று மிஷ்கின் எடுத்துள்ளார். லியோ என்றால் சிங்கம்,சிம்மம் என்று பொருள். அதுவும் ஏற்கெனவே சிங்கம் 3 வரை வந்திருக்கிறது. மேலும் சிம்மராசி என்ற பெயரிலும் படம் வந்திருக்கிறது.

இதையும் படிங்க : படப்பிடிப்பின் போது பீறிட்டு வந்த இரத்தம்!.. கண்ணிமைக்கும் நேரத்தில் கேப்டன் செய்த செயல்!..

ஏதோ டைட்டிலுக்கு தட்டுப்பாடு என்பது போல இப்படி வைப்பதற்கு என்ன காரணம் என்று புலம்பி வருகின்றனர். மேலும் தமிழக அரசு ஒரு காலத்தில் தமிழில் பெயர் வைக்கக் கூடிய படங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் அந்த திட்டம் சில காலம் மட்டும் இருந்து அரசு மாறிய போது விலக்கு தகர்க்கப்பட்டது. அது முதலே மறுபடியும் ஆங்கில பெயரிலேயே தலைப்பு வைக்கப்படுகிறது. அதுவும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருக்கும் ஒருவர் தமிழை புறக்கணிக்கலாமா என்று கூறிவருகின்றனர்.

Published by
Rohini

Recent Posts