“தளபதி 68” படத்தின் கதையில் முதலில் நடிக்க வேண்டியது இந்த நடிகர்தான்? மிரட்டல் தகவலா இருக்கே!
“தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என்பது பலரும் அறிந்ததே. இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்துள்ளார் யுவன்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் 22 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அன்று விஜய் பிறந்தநாள் என்பதால் அன்றே இத்திரைப்படத்தின் பூஜை போடப்பட உள்ளதாகவும் தகவல் வெளிவருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு ரஜினிகாந்திடம் இரண்டு மாஸ் ஆன கதைகளை கூறினாராம். ஆனால் அந்த இரு கதைகளும் ரஜினிகாந்திற்கு பிடிக்கவில்லையாம். இந்த நிலையில் அந்த இரு கதைகளில் ஒரு கதையைத்தான் தற்போது விஜய்யிடம் கூறியிருக்கிறாராம் வெங்கட் பிரபு. அந்த கதைதான் “தளபதி 68” திரைப்படமாக உருவாகவுள்ளதாம். இவ்வாறு ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் தற்போது விஜய் நடிக்கவுள்ளார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கையில படமே இல்லாம பந்தா பண்ணிய சத்தியராஜ்.. கலாய்த்து தள்ளிய கவுண்டமணி…