அட இன்னும் எத்தனதான் எடுப்பீங்க! தளபதி 68-ம் அதேதானாம்!.. அட போங்கப்பா!..!

by சிவா |   ( Updated:2023-10-24 16:08:42  )
thalapathy 68
X

Thalapathy 68: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ படம் ஒருவழியாக வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. ஒருபக்கம் விஜய் தனது அடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி, அஜ்மல் என பலரும் நடிப்பதாக சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: விஜயதசமி அதுவுமா இது தேவையா? – சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட டீசர்..

முதலில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அப்பா விஜய்க்கு ஜோதிகாவும், மகன் விஜய்க்கு பிரியங்கா மோகனும் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், ஜோதிகா இந்த படத்திலிருந்து விலகிவிட அவருக்கு பதில் சினேகா வந்தார். மேலும், கொலை படத்தில் நடித்த மீனாக்‌ஷி சவுத்ரி ஒப்பந்தமானார்.

இப்படத்திற்காக விஜயை மிகவும் இளமையாக காட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தி வரும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக சொல்லப்பட்டது. இதற்காக விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் அமெரிக்காவும் சென்றனர்.

இதையும் படிங்க: மவனே பிட்டா அடிக்கிற!.. அனிருத்தை வசமாக சிக்க வைத்த ரசிகர்கள்.. ஓனருட்ட பிடிச்சு கொடுத்துட்டோம்ல!..

இப்படத்தின் பூஜை வீடியோவும் இன்று காலை வெளியானது. அதில் பார்க்கும்போது ஜெயராம், விடிவி கணேஷ் என பலரும் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை படம்பிடித்தனர். அடுத்து அதிரடி சண்டை காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த படமும் டைம் டிராவல் கதையாகத்தான் உருவாகவுள்ளதாம். ஏற்கனவே மாநாடு படத்தையும் வெங்கட்பிரபு டைம் டிராவல் கதையாகத்தான் எடுத்தார். அதேபோல், விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகி ஹிட் அடித்த மார்க் ஆண்டனி படமும் டைம் டிராவல் கதையாகத்தான் உருவானது. இதற்காகத்தான் விஜயை இளமையாக காட்ட அதிநவீன ஏ.ஐ.தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளனராம். விஜயை வைத்து படமாக்கிய முதல் பாடலை கூட அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தித்தான் இளமையாக காட்டபோகிறார்களாம்.

இதையும் படிங்க: ஸ்டைலாக எண்ட்ரியாகும் வர்மா..! மாஸ் கம்பேக் கொடுத்த விக்ரம்.. ஆக்‌ஷனில் மாஸ் காட்டும் துருவ நட்சத்திரம் ட்ரைலர்..!

Next Story