Cinema News
10 மாசம் முன்னாடியே விஜய்க்கு கதை சொல்லி கமிட் ஆன வெங்கட் பிரபு.. வெளியான செம்ம ரகசியம்
தளபதி68 படம் குறித்து வெங்கட் பிரபு முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்தனர்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 300 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67-வது லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு, இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்த புதிய படத்தினை தயாரிக்க உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பில் “என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா. இந்த போட்டோவை அறிவிப்புக்கு பிறகு தான் வெளியிடுவேன் என்ற சத்தியத்தை காப்பாற்றி உள்ளேன். 10 மாதங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்கிறேன். கனவு மெய்யாகி உள்ளது.” என வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.