20 வருடங்களுக்கு பிறகு அந்த ஒரு மேஜிக்! ‘தளபதி68’ படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் நடிகை
தளபதி 68 படத்தை பற்றி பேக் டு பேக் அப்டேட் வந்து கொண்டே இருக்கின்றது. இது ஒரு விதத்தில் இந்த படத்திற்கான ஹைப்பை அதிகரித்தாலும் விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. ஆரம்பத்தில் தளபதி 68 படத்தை பற்றிய அப்டேட் வந்தபோது லோகேஷ் சந்தோஷமாகத்தான் இருந்தார்.
ஏனெனில் இனிமேல் ரசிகர்கள் தன்னிடம் லியோ படத்தை பற்றி எந்தவித அப்டேட்டும் கேட்க மாட்டார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் அதுவே லியோ படத்திற்கு பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. லியோ படத்தைப் பற்றி எந்தவித செய்திகளும் எந்த ஒரு தகவல்களும் இணையத்திலோ ஊடகப் பத்திரிகைகளோ வெளிவராமல் தளபதி 68 படம் மொத்தத்தையும் ஆப் செய்து விட்டது.
அதனால் சம்பந்தப்பட்ட படக்குழு வெங்கட் பிரபுவை அழைத்து லியோ படம் வெளியாகும் வரை தளபதி 68 படத்தை பற்றி எந்தவித அப்டேட்டும் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி இருக்கின்றனர். ஆனாலும் சில தகவல்கள் கசிந்து கொண்டு தான் வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஹாட்டான அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தளபதி 68 படத்தை பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தபோது விஜய்க்கு ஜோடியாக எந்த நடிகையை போடலாம் என வெங்கட் பிரபு உட்பட அனைவரும் ஆலோசித்துக் கொண்டு இருந்தார்களாம். ஆளாளுக்கு ஒரு நடிகையின் பெயரை குறிப்பிட வெங்கட் பிரபு திடீரென ஜோதிகாவை போடலாமா என கேட்டிருக்கிறார். இதைக் கேட்டதும் அனைவருக்கும் அதிர்ச்சியாகி விட்டதாம்.
இதுதான் வெங்கட் பிரபுவும் எதிர்பார்த்தது. ஏனெனில் நீங்களே இந்த அளவுக்கு ஷாக் ஆகும்போது மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியாக மாட்டார்கள். இதுதான் நமக்கு தேவை .அதனால் ஜோதிகாவிடம் போய் கேளுங்கள் என கூறினாராம். மேலும் தளபதி 68 படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி கலந்த என்டர்டைன்மென்ட் படமாகவும் குடும்பப்பாங்கான படமாகவும் அமைவதால் ஜோதிகா இதற்கு பொருத்தமாக இருப்பார் என்ன கூறியிருக்கிறார். இதன் மூலம் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் ஜோதிகா கூட்டணியில் தளபதி 68 படத்தை ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : விஜய் சொன்னதுமே செஞ்சிருக்கனும்.. பலி ஆடா வந்து மாட்டிக்கிட்ட மகிழ்திருமேனி!