Thalapathy 69: விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவருடைய கடைசி படம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு அதன் பிறகு நடிக்கும் படம் என்பதாலும் இந்தப் படத்தின் மீது அதிகளவில் ஹைப்பும் இருக்கிறது. அவர் நடத்திய மாநாட்டிலேயே அவரின் அசுரத்தனமான பேச்சை பார்க்க முடிந்தது. அதனால் படத்திலும் கண்டிப்பாக ஒரு தரமான அரசியல் வசனத்தை பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளியது. படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் விஜய்க்கு என ஒரு நல்ல ஓப்பனிங் இருக்கிறது. பல கோடி சம்பளம் பெறும் போதே அதெல்லாம் வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு அரசியலில் குதிக்கிறார் என அவர் மீது திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஒரு பெண்ணோடு வாழனும்.. இதனால்தான் கமல் டாப்புக்கே வரல! கண்டிப்பா ஆப்பு உறுதி
இந்த நிலையில் தளபதி 69 படத்தில் விஜயின் சம்பளம் 270 கோடி என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.இதை பற்றி தயாரிப்பாளரும் பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்திரன் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். அதாவது 270 கோடி சம்பளம் எனும் போது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு எப்படி கட்டுப்படி ஆகும்? ஒரு படத்தோட பட்ஜெட்டே 270 கோடி. அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும் என ரவீந்தரிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் இதோ:
ஒரு தயாரிப்பு நிறுவனம் 270 கோடி சம்பளம் கொடுக்கிறாங்கனா அது எப்படி எந்த ஆங்கிள பார்க்கிறதுனு தெரியல. ஆனால் ஜிஎஸ்டியுடன் சேர்த்து பார்த்தால் விஜய்க்கு மட்டுமே 300 கோடி சம்பளமாக போய்விடும். இன்னும் 50 லிருந்து 100 கோடி தயாரிப்பு செலவுக்கு போகும் , இன்னும் 50 கோடி மற்ற ஆர்ட்டுஸ்டுக்கு போகும் .எப்படி பார்த்தாலும் இந்தப் படத்தோட பட்ஜெட் மொத்தம் 500 கோடி.
இதையும் படிங்க: ஒரு பெண்ணோடு வாழனும்.. இதனால்தான் கமல் டாப்புக்கே வரல! கண்டிப்பா ஆப்பு உறுதி
இது விஜய்க்கு கடைசி படம் என்பதாலும் ரசிகர்களும் ஆர்வத்துடன் திரையரங்கிற்கு பார்க்க வருவார்கள் என்ற அதிக கான்ஃபிடன்ஸ் வைத்து இந்தப் படத்தை ஆரம்பிக்கலாம் என ரவீந்திரன் கூறினார்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…