விஜய்தான் டார்க்கெட்டா?!.. தளபதி 69 படத்தை முடக்க சதியா?!.. இந்த அரசியலே இப்படித்தான்!..

#image_title
Goat: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகிவிட்டார். அரசியலுக்கு வருவது உறுதி என பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும் இப்போது தனது கட்சி கொடியை அறிமுகம் செய்ததோடு, கம்பத்தில் அதை கொடியாகவும் ஏற்றிவிட்டார். அதோடு, வெற்றி நிச்சயம்.. நல்லதே நடக்கும் எனவும் சொல்லி அவரின் கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அவரின் கட்சியினர் போட்டியிடவிருக்கிறார்கள். மக்களின் தனது கட்சிக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை விஜய் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். தீவிர அரசியலில் இறங்குவதால் சினிமாவிலிருந்து விலகுவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

#image_title
கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இது விஜயின் 69வது திரைப்படமாகும். சட்டமன்ற தேர்தலில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்தே மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பாரா என்பது தெரியவரும்.
சினிமாவையும், அரசியலையும் பிரிக்கவே முடியாது. அதற்கு காரணம் சினிமாவிலிருந்து வந்து எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியதுதான். எனவே, விஜய்க்கு கண்டிப்பாக பலத்த போட்டி இருக்கும். பல வகையிலும் குடைச்சல் கொடுப்பார்கள்.

#image_title
ஏற்கனவே அவரின் படங்கள் வெளியானபோது அரசியல் கட்சியினர் குடைச்சல் கொடுத்திருக்கிறார்கள். அதில் வந்த கோபத்தில்தான் விஜய் அரசியலுக்கு வர முடிவெடுத்தார். ஒருபக்கம், நடிகர், நடிகைகள் கொடுக்கும் குடைச்சலை காரணமாக சொல்லி வருகிற நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெறாது என தயாரிப்பாளர்கள் சொல்லிவிட்டனர்.
விஜயின் புதிய படம் அக்டோபர் 5ம் தேதி துவங்கவுள்ளது. எனவே, விஜயின் படப்பிடிப்பு நடந்துமுடிந்துவிட்டல் அவர் ஃபிரியாக தேர்தல் வேலைகளை பார்க்க துவங்கிவிடுவார் என்பதால் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ள ஸ்டிரைக்கின் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்டிரைக் நடக்குமா?.. அரசியல்ரீதியான எதிர்ப்புகளை விஜய் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதெல்லாம் போகப்போக தெரியவரும்.
இதையும் படிங்க: த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்திற்கு எதிர்ப்பு!.. ஆரம்பமே அமர்க்களம்தான்!…