தள்ளிப்போகும் தளபதி 69!.. விஜய் நினைப்பது நடக்குமா?!.. பரபர அப்டேட்!…

Published on: May 29, 2024
vijay
---Advertisement---

லியோ படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை மங்காத்தா மற்றும் மாநாடு உள்ளிட்ட சில படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் 2 வேடங்கள் எனவும், 3 வேடங்கள் எனவும் புதுப்புது செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த் என பலரும் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சினேகா மற்றும் மீனாக்‌ஷி சவுத்ரி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இடம் பெற்ற விசில் போடு பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், இந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

இதையும் படிங்க: ஓடிடி-யில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 5 படங்கள்!.. முதலிடத்தில் மாஸ் காட்டும் சலார்…

கோட் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும். பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடித்து முடித்து மற்ற வேலைகள் நடக்கும்போதே அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு விடும். ஆனால், கோட் படத்தின் பாதி டப்பிங்கையே பேசி முடித்துவிட்டார் விஜய்.

ஆனாலும் இன்னமும் அவரின் அடுத்தபடம் தொடர்பான அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது. இப்போதைக்கு ஹெச்.வினோத் இயக்குனர் என்பது மட்டும் முடிவாகி இருக்கிறது. சில தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் அடிபடுகிறது. இது விஜயின் 69வது திரைப்படமாகும். இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்டு மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

vinoth

ஆனால், இப்போது அக்டோபருக்கு தள்ளி போயிருக்கிறது. அதற்கு காரணம் விஜயின் அரசியல் திட்டம்தான். கட்சிக்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னரே அந்த ஃபைலை அவர்கள் கையில் எடுப்பார்கள். அதன்பின் மாநாடு நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும்.

எனவேதான், அதற்கு இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என கணக்குப்போட்ட விஜய் அக்டோபரில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறாராம். இதுதான் விஜயின் கடைசி படம் என சொல்லப்பட்டாலும் அவர் தொடர்ந்து நடிப்பார் என்றே சினிமா பத்திரிக்கையாளர்கள் பலரும் சொல்கிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.