More
Categories: Cinema News latest news

ஊசலாடிக் கொண்டிருக்கும் தளபதி 69! எல்லாம் வெங்கட் பிரபு கைலதான் இருக்காம்… இது வேறயா?

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஹீரோவாக கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இன்று அவருடைய ஐம்பதாவது பிறந்த நாள். அவருடைய ரசிகர்கள் விஜயின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அவரது பிறந்த நாள் பரிசாக அவர் நடித்துக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் நடக்குமா நடக்காதா என்ற ஒரு விவாதம் திரை உலகில் நடந்து வருகிறது. இதைப்பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் மற்றும் தனஞ்செயன் கூறியதாவது: சித்ரா லட்சுமணன் கூறும் போது  ‘விஜயின் தரப்பிலிருந்து எனக்கு தெரியவந்தது. கோட் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு தான் தளபதி 69 படத்தில் நடிக்கவா வேண்டாமா என விஜய் முடிவு செய்வார் என்றும் அந்தப் படத்தின் ரிசல்ட்டுக்காகத்தான் விஜய் காத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டதாக’ சித்ரா லட்சுமணன் கூறினார். இப்படி பார்த்தால் கோட் படத்தின் வெற்றி வெங்கட் பிரபுவின் கையில்தான் இருக்கிறது.

இதையும் படிங்க: நீங்க பிஸியான நடிகைனு தெரியும்.. அதுக்கு இதுக்கெல்லாம ஆள் வைப்பீங்க! மீனாவின் அட்ராசிட்டி

ஆனால் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது  ‘கோட் படத்தின் ரிசல்ட் காக விஜய் காத்திருக்கிற மாதிரி தெரியவில்லை. என்னை பொருத்த வரைக்கும் தளபதி 69 ஆவது படம் கண்டிப்பாக நடைபெறும். கோட் திரைப்படம் அவருடைய கடைசி படமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அரசியலுக்கு விஜய் செல்ல இருப்பதால் அவருடைய கடைசி படம் ஒரு ஐகானிக் திரைப்படமாக அமைய வேண்டும்.

கோட் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் பெரிய பெரிய நடிகர்கள் நடிக்க ஒரு ஆக்சன் படமாக இருக்குமே தவிர ஒரு ஐகானிக் படமாக இருக்காது. மக்கள் அவருடைய படத்தை பார்த்த பிறகு முழு மனசாக அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு தான் அவர் அரசியலுக்கு வர வேண்டும்.

இதையும் படிங்க: சும்மா ஒன்னும் 200 கோடி வாங்கல! விஜயின் ஆரம்ப கால சம்பளத்தை கேட்டா ஆச்சரியப்படுவீங்க

அதனால் தளபதி 69ஆவது திரைப்படம் அப்படி ஒரு ஐகானிக் திரைப்படமாக அமையும் .மேலும் அவருடைய கணக்குப்படி தளபதி 69 ஆவது திரைப்படம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு அக்டோபர் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனால்தான் அது பொங்கல் வரை அந்த படம் பேசப்படும்.  அப்படி இருந்தால்தான் அவரின் அரசியல் பிரவேசத்திற்கும் அந்த படம் உறுதுணையாக அமையும். அதனால் கண்டிப்பாக தளபதி 69வது திரைப்படம் விஜய்யின் சினிமா கெரியரில் ஒரு முக்கியமான படமாக அமையும் ’ என கூறினார்

Published by
Rohini