அடுத்த வருஷம் இப்படி ஒரு கிளாஷ் இருக்கா...? சூப்பர் ஸ்டார் vs தளபதி... இப்பவே வா..!
அடுத்த வருடம் தளபதி 69 திரைப்படத்துடன் ஜெயிலர் 2 திரைப்படம் மோத அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் வயதான போதிலும் மாஸ் காட்டி வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜையை குறிவைத்து வெளியாக இருக்கின்றது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகின்றது. கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் ரஜினி தற்போது அரசியலுக்கு வரப்போவதில்லை என்கின்ற முடிவை எடுத்துவிட்டு தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து வேட்டையன் திரைப்படமும் நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கூலி மற்றும் ஜெயிலர் 2 என அடுத்தடுத்து திரைப்படங்களை கையில் வைத்திருக்கின்றார் ரஜினிகாந்த். இதற்கிடையில் நடிகர் விஜயின் 69 ஆவது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கின்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்க இருக்கின்றார்.
மேலும் கேவிஎன் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருக்கின்றார். இன்று மாலை 5 மணிக்கு வெளியாகி இருக்கின்றது. மேலும் இது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
கூலி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் தீபாவளியை குறி வைத்து தான் இருக்கின்றது. இதனால் அடுத்த வருடம் தீபாவளிக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்துடன் சூர்யாவின் கங்குவா திரைப்படம் மோத இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் சூர்யா பின்வாங்கி விட்டார். இதே போல நடிகர் விஜய் பின்வாங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.